கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையைப் புனரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் சாலைக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
தொடர்ந்து இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி பலமுறைப் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.
















