உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் - அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!
Mar 15, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை 150 முறை அழிக்க, போதுமான அணுஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கு அமெரிக்கா தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் மீண்டும் அணு ஆயுதப் போருக்குத் தயாராகிறாரா ? சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் அணு ஆயுதப் போராக மாறுமா? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளாகச் சீனாவும் அமெரிக்காவும் உள்ளன. பல ஆண்டுகளாகவே இந்த இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடர்ந்து வருகிறது. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், சீனா மீது கடுமையான வர்த்தகப் போரைத் தீவிரமாக்கியுள்ளார்.

சீனா மீது அமெரிக்கா அதிக வரிகள் விதித்த நிலையிலும், அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சீனா-அமெரிக்க வர்த்தகம் சுமார் 659 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது 2023 ஆம் ஆண்டை விட அதிகம்.

அண்மையில், தனது ஆசிய பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க அதிபர், 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தென்கொரியாவில் சந்தித்து நேருக்கு நேர்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, மீண்டும் அணு ஆயுதச் சோதனையைத் தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில், மீண்டும் தனது அணுஆயுதசோதனைக் கருத்தை ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ரஷ்யா தங்கள் புதிய அணு ஆயுதங்களைச் சோதனைச் செய்துள்ளது என்றும், சீனாவும், வடகொரியாவும் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாகவும் கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், 33 ஆண்டுகளாக அணு ஆயுதச் சோதனை செய்யாத ஒரே நாடு அமெரிக்கா தான் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இனி அமெரிக்கா அப்படி இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

உலகை 150 முறை அழிக்கும் அளவுக்கு வேறு எந்த நாட்டையும் விடவும் அதிக அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும், ஆனாலும் அணு ஆயுதக் குறைப்பு குறித்து , ரஷ்ய அதிபர்  புதினுடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனும் விவாதித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஹேக்கர்கள் அமெரிக்க மின் உள்கட்டமைப்பு மற்றும் நீர் அமைப்புகளில் ஊடுருவி, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுவதாகவும், அமெரிக்க அறிவுசார்  சொத்து மற்றும் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சீனா திருடி வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டி வருகிறது.

இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வகையில் சீனா எப்போதும் அமெரிக்காவைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும் அமெரிக்காவும் சீனாவைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், சீனாவை விட அமெரிக்கா எல்லாத் துறைகளிலும் சிறந்தவர்களாகவும், வலிமையானவர்களாகவும் இருக்க முடியும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆண்ட்ராய்டு போன் தொடங்கி பாதுகாப்புதுறையில் நவீன ஆயுதங்கள் வரை அனைத்துக்கும் அவசியமான அரியவகை மண் தூதுக்கள் சீனாவிடம் மட்டுமே உள்ளது. உலகின் 99 சதவீத அரியவகை மண் தாதுக்களைக் கட்டுப்படுத்தும் சீனாவைத் தான் அமெரிக்கா நம்பியுள்ளது.

அரிய வகைத் தாதுக்கள் ஏற்றுமதிக்குச் சீனா கட்டுப்பாடுகள் விதித்த காரணத்தால், சீனாவுக்கான போயிங் விமானத்தின் உதிரி பாகங்களை அமெரிக்கா நிறுத்தியதாகவும் அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்கா நடத்தும் அணு ஆயுதச் சோதனையில், அணு வெடிப்புகள் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ள அமெரிக்க எரிசக்தி செயலாளர்  கிறிஸ் ரைட், புதிய மாற்று அணு ஆயுதங்கள் முந்தைய ஆயுதங்களை விடவும் விட சிறந்தவை இருக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையே இருந்துவரும் நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். சீனா மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாகச் சீனா அறிவித்தது.

வர்த்தகமும், வரியும் இருநாடுகளுக்குமான முக்கிய பிரச்னை இல்லை என்பதை இருநாட்டின் அதிபர்களும் அறிவார்கள் என்றும், தங்கள் நிலைப்பாடுகளை மாற்றாமல், கால அவகாசம் பெற்றுக்கொள்ளவே, ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக இருப்பதாகக் காட்டுகிறார்கள் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: americausaDonald Trumpnuclear bombEnough nuclear bombs to destroy the world 150 times - President Trump warns
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

Next Post

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies