நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்குத் தலைமை தாங்கிய பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி, 512 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
அதிலும் குறிப்பாகக் கதில்நிலன் என்ற இளங்கலை மாணவருக்கு 11 தங்கப் பதக்கங்களை வழங்கி ஆளுநர் ரவி பாராட்டினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் டெல்லியின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் துணை இயக்குநர் ஜாய்கிருஷ்ணா ஜெனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இருப்பினும், மீன்வளத்துறைக்கு அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான அனிதா ராதா கிருஷ்ணன், இந்த விழாவைப் புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















