தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடங்குகிறது.
தமிழகச் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை ஒட்டி, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெறும் எனத் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெற உள்ளது. வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணியை, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன் அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர்கள் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.
இதேபோல் புதுச்சேரியில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடங்குகிறது.
சிறப்பு திருத்தத்தில் போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
			















