மதுரை மானகிரி கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1969ம் ஆண்டு, கல்லூரி கட்டுவதற்காக வக்ஃப் வாரியத்திற்குத் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் கருதி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
			















