சென்னை எழும்பூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் தொடங்கி உள்ளன.
இதையொட்டி சென்னை எழும்பூரில் அத்தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட 12 கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் பங்கேற்றனர்.
பிற்பகலில் தேர்தல் ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு அச்சிடப்பட்ட படிவங்கள் வழங்குவர் எனவும் வாக்காளர்கள் எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர்கள் படிவத்தைப் பெற்றுக்கொண்டதும், அதற்கான ஒப்புகைச் சீட்டும் வழங்கப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
















