ஆழமான மொழி மாதிரி செயற்கை நுண்ணறிவு செயலியான ChatGPT-ஐ உருவாக்கியுள்ள Open-AI நிறுவனம், இந்தியாவில் ChatGPT Go சந்தாவை 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சலுகையைப் பெற கட்டாயமாகக் கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ போன்ற கட்டண முறையை இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்தச் சலுகையை வெப்சைட், கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.
ஆப்பிள் ஃபோன்களுக்கு அடுத்த வாரம் முதல் இது கிடைக்கும் என்றும் Open-AI நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு முறை இந்தச் சலுகையை பெற்ற பிறகு ரத்து செய்தால், அதே கணக்கில் மீண்டும் அதைப் பெற முடியாது என்றும் Open-AI தெளிவுபடுத்தியுள்ளது.
















