கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் ,
கோவை மாணவி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்.முருகன் கூறினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுகிறது என்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது என்று எல்.முருகன் குற்றம் சாட்டினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது என்றும் கஞ்சா நடமாட்டம் சமுதாயத்தைச் சீரழித்து கொண்டிருக்கிறது என்று எல்.முருகன் குறிப்பிட்டார்.
















