பெங்களூருவில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் மகேந்திர ரெட்டி, உனக்காகத்தான் என் மனைவியைக் கொன்றேன் எனப் பல பெண்களுக்குச் செய்தி அனுப்பிய திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொது அறுவைச் சிகிச்சை நிபுணரான மகேந்திர ரெட்டி, அறுவைச் சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் Propofol என்ற சக்திவாய்ந்த மயக்க மருந்தைச் செலுத்தி தனது மனையை கொலைச் செய்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், உனக்காகத்தான் என் மனைவியைக் கொன்றேன் எனப் பல பெண்களுக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
மகேந்திர ரெட்டியின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்தபோது இந்தக் கொடூரமான விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையைப் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
			















