கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர்,
இரவு 11.20-க்கு அழைப்பு வந்த நிலையில், 11.35-க்கு காவலர்கள் சென்றனர் என்றும் வன்கொடுமை நடந்த இடத்தில் சுவரைத் தாண்டி சென்றதால் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்பதில் தாமதம் ஆனது என்று அவர் கூறினார்.
சம்பவ இடம் மிகவும் இருள் சூழ்ந்து இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிக்க 5 மணி நேரமானது என்றும் பாதிக்கப்பட்ட பெண் அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளார் என்று கூறிய காவல் ஆணையர் சரவண சுந்தர், கோவையில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வேலைச் செய்யவில்லை என்று அவர் கூறினார்.
			















