கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில், தாயிடமிருந்து பிரிந்து வந்த மூன்று புலிக்குட்டிகளை ஓரு NGO நிறுவனம் தொட்டு படம் பிடித்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள புனஜனூர் வனப்பகுதிட்பட்ட எஸ்டேட்டில் தாயிடமிருந்து பிரிந்த நிலையில் மூன்று புலிக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
அப்போது, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள், அந்தக் குட்டிகளைப் பிடித்து வீடியோ எடுத்துள்ளனர்.
இந்தச் சட்ட மீறலைக் கண்டித்து, சமூக ஆர்வலர் தினேஷ் கல்லல்லி என்பவர், கர்நாடக வனத்துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் புகார் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
			















