உலகிலேயே அதிகக் கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியலில் ஆப்பிரிக்க நாடுகள் முதன்மை வகிப்பதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்துத் தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகளவில் அதிகக் கருவுறுதல் விகிதம் கொண்ட முதல் 10 நாடுகள் பட்டியலில் பெரும்பாலானவைச் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெற்றுள்ளன.
நைஜர் நாடு அதிகபட்சமாக 6.64 என்ற மொத்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அங்கோலா, காங்கோ , மாலி , பெனின், சாட், உகாண்டா, சோமாலியா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகள் 5க்கும் மேற்பட்ட கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் 2.03 என்ற மொத்த கருவுறுதல் விகிதத்துடன் இந்தியா 101ஆவது இடத்தில் உள்ளது.
			















