சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நைசாக நழுவி சென்ற திமுக எம்.எல்.ஏவை எம்.பி கார்த்தி சிதம்பரம் கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா எம்.பி கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க முற்படும்போதே, அருகில் நின்றிருந்த எம்.எல்.ஏ தமிழரசி நைசாக அங்கிருந்து நழுவி சென்றார்.
இருப்பினும் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், காவல்துறையினர் ரவுடிகளின் பட்டியலைத் தயார் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் ரவுடிகள், கூலிப்படையினர் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்னர் எம்.எல்.ஏ தமிழரசியை அழைத்த கார்த்தி சிதம்பரம் அரசு, காவல்துறையை விமர்சித்தால் ஏன் ஓடி செல்கிறீர்கள்? எனக் கிண்டாலக கேள்வி எழுப்பினார்.
















