தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதற்கு கோவை பாலியல் வன்கொடுமை சம்பவமே சாட்சி என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகக் கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
கோவை தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதற்கு கோவை பாலியல் வன்கொடுமை சம்பவமே சாட்சி என்றும் உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கு மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் முயன்று வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை என்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
















