கரூர் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.
கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கைக் கடந்த 17ஆம் தேதி முதல் சிபிஐ எஸ்பி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 17 காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கரூர் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர் நேரில் விசாரணைக்கு ஆஜாராகியுள்ளனர்.
















