நாமக்கல்லில் தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம் யாத்திரையின்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரிதிநிதிகளுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடினார்.
‘தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாமக்கல் மாவட்டம், ஊனாங்கல்பட்டியில் யாத்திரை மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, நாமக்கல் அருகே தமிழக அரசு கொண்டுவரும் சிப்காட் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நகர பகுதியில் உள்ள தலைமை மருத்துவமனையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மோகனூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
















