பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை என மனோஜ் பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மனோஜ் பாண்டியன், அந்த கட்சியில் இருந்து விலகித் திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட கொள்கைகளை காப்பதற்காகத் திமுகவில் இணைந்ததாகத் தெரிவித்தார்.
















