ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 650 அடியில் உள்ள பர்வதமலையில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்,
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் பர்வத மலை உள்ளது. இந்த மலை 4560 அடி உயரம் கொண்டது. இந்த மலையில் பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுன ஈஸ்வரர் உள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பர்வத மலை அடிவாரத்தில் இருந்து சுமார் ஏழு மலைகள் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பர்வத மலைக்கு வந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
மலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேர அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடைய மலைஅடிவாரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
















