பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த படுகாத்தம்பட்டியில் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அன்புமணி ஆதரவாளர்கள் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்டோர் சேலம் எஸ்பி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















