சர்ச்சைக்குரிய இஸ்லாமியர் மதபோதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழையத் தற்காலிகமாக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், பயங்கரவாதத்தை துாண்டும் விதமாகப் பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இந்தநிலையில் நவம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு, ஜாகிர் நாயக்கை அழைத்திருந்தது.
எனினும் சட்டம் – ஒழுங்கைக் காரணம் காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜாகிர் நாயக் வங்கதேசத்தில் நுழைய அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
















