திமுக ஆட்சியில் மதுபோதை, கஞ்சா ஆகியவை அதிகரித்துள்ளதாக, பாஜக மகளிரணி மாநில துணை தலைவர் சங்கீதா மதிவாணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகச் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கண்டன உரையாற்றிய பாஜக மகளிரணி மாநில துணை தலைவர் சங்கீதா மதிவாணன், திமுக அரசு குற்றவாளிகளைச் சுதந்திரமாகச் செயல்பட வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
















