இந்தியாவின் வந்தே பாரத் ரயில் வசதிகள் குறித்து பிரிட்டிஷ் குடும்பத்தினர் புகழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வந்தே பாரத் விரைவு ரயில் பிற ரயில்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
பயோ வேக்யூம் கழிவறைகள், ஒய்-ஃபை வசதி, முழு தானியங்கி கதவுகள் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இயங்கும் திறன் எனப் பன்முக சிறப்புகளைக் கொண்டதாக இந்த ரயில்கள் காட்சியளிக்கின்றன.
இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட வந்தே பாரத் ரயில், உள்ளூர்வாசிகளை மட்டுமல்லாமல் வெளிநாட்டினரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் வந்தே பாரத் ரயில்குறித்து பிரிட்டிஷ் குடும்பமொன்று புகழ்ந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
அதன்படி இங்கிலாந்தைச் சேர்ந்த ஹட்கின்ஸ்ன் என்பவரது குடும்பமொன்று, இந்தியாவில் வந்தே பாரத் ரயிலில் பயணித்தனர்.
இதுகுறித்து பேசிய அக்குடும்பத்தினர், தலா 11 யூரோக்கள் செலவில் மேற்கொள்ளும் வந்தே பாரத் ரயில் பயணத்தின்போது , கேரமல் பாப்கார்ன், மாம்பழ ஜூஸ், இஞ்சி டீ உள்ளிட்ட தரமான உணவுகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
















