17 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானிக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
தொழிலதிபர் அனில் அம்பானி தன் நிறுவனங்கள் பெயரில் வாங்கிய கடனை, மற்ற நிறுவனங்களுக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாகக் கடந்த ஜூலையில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் தொடர்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தியது.
இதில் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு, பல்வேறு நிறுவனங்கள் வாயிலாகக் கடனாக பெற்ற தொகை, சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பான புகாரில், கடந்த ஆகஸ்டில் அனில் அம்பானி விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
பிறகு கடந்த செப்டம்பரில் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் முடக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் அனில் அம்பானிக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
















