திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் மலைபோல் தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் இங்குக் கொட்டுவதாகவும் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















