ஆந்திராவிலிருந்து ஒடிசா நோக்கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர அரசுக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினத்திலிருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்றுள்ளது.
அப்போது, ஸ்ரீகாகுளம் மாவட்டம், ரொட்டவலசா அருகே பேருந்து திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது.
எஞ்சினில் இருந்து புகை வருவதை கவனித்த பேருந்து ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தை நிறுத்தியதுடன், அதிலிருந்த 5 பயணிகளையும் பத்திரமாக வெளியேற்றினார்.
ஓட்டுநரின் இந்தச் சமயோசித செயலால், ஒரு பெரிய துயரம் தவிர்க்கப்பட்டது. தற்போது, இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















