மதுரை மேலூரில் கண்மாயின் வடிகால்கள் உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தொடர் கனமழையால் மேலூர் அருகே உள்ள சுந்தரப்பான் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் செல்லக்கூடிய வடிகாலை மர்ம நபர்கள் உடைத்தாகக் கூறப்படுகிறது.
இதனால் கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















