சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, நவம்பர் 17ஆம் தேதி முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மண்டல பூஜை தொடங்க உள்ளதால் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி – கல்லக்கட்டி, வண்டிப் பெரியாறு – சத்திரம் உள்ளிட்ட வனப்பகுதி வழியே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும், கரிமலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 17ஆம் தேதி காலை நுழைவுப் பகுதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
















