தருமபுரம் ஆதீனகர்த்தா மணிவிழாவை ஒட்டி யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தருமபுரம் ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60வது ஆண்டு மணி விழா நடைபெற்று வருகிறது.
7வது நாளான இன்று, மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் யானைகள், குதிரைகள், பசு உள்ளிட்ட ஒன்பது வகையான விலங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற்றனர்.
















