கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர், சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர், கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
















