கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது.
2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் மதியம் ஒன்று 45 மணிக்கு இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
















