குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார்.
இந்தியா–ஆப்பிரிக்க நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 நாள் அரசு முறை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்று புறப்பட்டு வரும் 13ம் தேதி வரை அங்கோலாவில் தங்க உள்ளார்.
அங்கு அங்கோலா அதிபர் ஜோவோ லூரென்கோ, அரசு நிர்வாக உயரதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் இந்தியர்களுடன் சந்திப்பில் ஈடுபடுகிறார். அதனைதொடர்ந்து அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் அந்நாட்டின் சுதந்திர நாள் விழாவிலும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொள்வார்.
இந்த பயணத்தில் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய தலைவர் இந்நாடுகளுக்கு வருகை தருவது இது முதன்முறை என்பதால் இருநாட்டு உறவில் இது முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது.
















