பிரதமர் மோடி 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்குபயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கேரளாவின் எர்ணாகுளம் – பெங்களூரு இடையேயும், உத்தரபிரதேசத்தின் பனாரஸ் நகரில் இருந்து மத்தியபிரதேசத்தின் கஜூராகோவுக்கு இடையேயும், உத்தரபிரதேசத்தின் யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையேயும், பஞ்சாபின் பிரோஸ்பூர்-டெல்லி இடையேயும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த நான்கு ரயில்களின் சேவைகளையும் பிரதமர் மோடி வாரணாசியில் நாட்டு மக்களுக்காக இன்று தொடங்கி வைக்கிறார்.
















