சிவகங்கையில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே கடந்த 2ம் தேதி ராஜேஷ் என்ற இளைஞர் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அதேபோல், ஒலி முகமது என்பவர் தேநீர் கடைக்கு வந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நான்கு கொலை சம்பவங்களும், ஆறுக்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியதற்கு காவல்துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு இஸ்லாமியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒலிமுகமதுவின் தாயார் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்ட நிலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
















