நடிகர் மோகன்லாலின் விருஷபா படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோகன் லால் – இயக்குநர் நந்தா கிஷோர் ஆகியோரது கூட்டணியில் வரலாற்று கதைகளத்துடன் “விருஷபா” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர்கள் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்படம், வரும் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.
















