சத்தீஸ்கரில் 37 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட 7 முக்கிய நக்சல்கள் போலீசாரிடம் சரணடைந்தனர்.
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் சத்தீஸ்கரில் நக்சல்கள் அதிகளவில் சரணடைந்து வருகின்றனர். அந்த வகையில் கரியாபந்த் மாவட்டத்தில் காவல்துறைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 7 முக்கிய நக்சல்கள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.
இந்தச் சரணடைவு அப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சரணடைந்த நக்சல்கள் 7 பேரின் தலைக்கும் 37 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
















