ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்துப் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக இப்படம் உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பா எனப்படும் அதிகாரமிக்க, கருணையற்ற, கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக அறிமுக போஸ்டரை ராஜமௌலி வெளியிட்டுள்ளார்.
















