பீகார் மக்களைத் திமுக தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் நிலையில், தனக்கு பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின் எனத் தேஜஸ்வி வெட்கமின்றி கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிா்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவிடம் தங்களுக்கு பிடித்த முதலமைச்ச யாா் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டதாகவும், அதற்குக் கொஞ்சமும் வெட்க மின்றி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என அவர் பதிலளித்ததாகவும் கூறினார்.
திமுகவினா் பீகாரிகளை தொடா்ந்து அவமதித்துப் பேசி வருவதாகவும், அக்கட்சி சனாதன தா்மத்தை தொடா்ந்து அவமதித்தாகவும், அயோத்தி ராமா் கோயில் கட்டுவதற்கும் எதிராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
பீகாரில் வளா்ச்சி வேண்டுமா அல்லது காட்டாட்சி வேண்டுமா என்பதைச் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பாஜக கூட்டணி ஆட்சி தொடா்வதன் மூலம்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்றும் கூறினார்.
















