பெங்களூருவில் ரயில்வே பாலத்தில் சீரமைப்பு நடைபெறுவதால் ஐடி ஊழியர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணித்து வருகின்றனர்.
பாணத்தூர் ரயில்வே பாலம் சீரமைப்பு பணிகள் காரணமாக 21 நாட்களுக்கு வாகனங்கள் அவ்வழியாகச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐடி ஊழியர்கள் வேலைக்குச் செல்லும்போதும், வேலை முடிந்து வீடு திரும்பும்போது குண்டும் குழியுமான சாலையில் ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
















