நீரிழிவு மற்றும் இதய நோய் உட்பட நாள்பட்ட நோய்களுள்ள வெளிநாட்டினருக்கு இனி அமெரிக்க விசா கிடைக்காது. அதற்கான புதிய விசா நெறிமுறைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உயர்தர கல்வி படிக்கலாம், கல்வி கற்கும்போது கல்வி கட்டணத்தோடு, வாழ்க்கை செலவுக்காக மாதாந்திர உதவி தொகையையும் அரசிடம் இருந்து பெறலாம், சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் அதற்குக் குறைந்த வட்டியில் அரசு வங்கிகளிடம் கடன் பெறலாம், அதேபோல் சிறு வணிகங்களையும் எளிதாக நடத்தலாம்.
நவீன மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்பன போன்ற பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவை இந்தியர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். உலகளவில் மிகப் பெரிய அளவில், சுமார் நாலரை லட்சத்துக்கும் மேல், புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.
இரண்டாவது இடத்தில் அமெரிக்காவில் அதிக அளவில் சீனர்கள் உள்ளனர். இரண்டாவது முறைஅதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்குத் தான் முன்னுரிமை வழங்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இதற்காக, வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி கல்வி பெறுவதற்கும், வேலை செய்வதற்கும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ட்ரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் இருக்கிறது என்றால் அவர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்படலாம் என ட்ரம்ப் நிர்வாகம் புதிய நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
இந்தப் புதிய உத்தரவு உலகெங்கிலும் உள்ள அந்நாட்டின் தூதரகங்களுக்கும் துணை தூதரகங்களுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசா விண்ணப்பத்தை ஏற்கும் முன், விண்ணப்பதாரரின் உடல் நலன்,மன நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
குறிப்பாக இதய நோய் , சுவாச நோய் ,புற்றுநோய், நீரிழிவு, வளர்ச்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நோய்கள் என அமெரிக்க அரசு பட்டியலிட்டுள்ள நோய்கள் இருக்கும் விண்ணப்பதாரின் விசா விண்ணப்பம் ரத்து செய்ய இந்த உத்தரவு வழிகாட்டியுள்ளது. மேலும் உடல் பருமன், ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள நோய்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கான லட்சக்கணக்கான டாலர் செலவுகளை ஏற்கக் கூடிய நிலையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, தொற்று நோய் உள்ளதா?இதுவரை என்னென்ன தடுப்பூசிகள் எப்போது செலுத்தப்பட்டுள்ளது?அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்வது வழக்கம்தான். என்றாலும் இப்போது கொண்டுவந்திருக்கும் புதிய வழி முறை அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவர், வருங்காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் நிதிச் சுமையாக மாறக்கூடும் என்று ட்ரம்ப் அரசு நம்புவதே, இந்தப் புதியய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. B-1, B-2 மற்றும் F1 உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை கேட்காத விசாக்கள் உட்பட அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும் என்றாலும் H1B விசாக்களுக்கு இந்த புதிய விதி பொருந்துமா என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.
புதிய விதிமுறை வயதான விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுவான நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்குச் சட்டப்பூர்வ குடியேற்ற அனுமதியை தடுக்கும் முயற்சி என்று கூறப் படுகிறது. அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, தொற்று நோய்உள்ளதா? இதுவரை என்னென்ன தடுப்பூசிகள் எப்போது செலுத்தப் பட்டுள்ளது?அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்வது வழக்கம்தான். என்றாலும் இப்போது கொண்டுவந்திருக்கும் புதிய வழி முறை அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















