நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய் கடைசியாக ஒப்பந்தமான ஜனநாயகன் படத்தைத் தனது கடைசி படமாக அறிவித்தார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜனநாயகன் படம் பொங்கல் பரிசாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் எனச் சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி, ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
















