தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இன்ஜின்களை வாங்குவதற்கான ஒப்பந்ததில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
உள்நாட்டில் போர் விமானங்களைத் தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து, 97 தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, 2027 – 28ம் நிதியாண்டு முதல் ராணுவத்துக்கு போர் விமானங்கள் வழங்கும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தொடங்கும்.
இந்நிலையில் தேஜஸ் போர் விமானங்களுக்கான இன்ஜினை, அமெரிக்காவின் GE AERO SPACE நிறுவனத்திடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், விமான இன்ஜின் விநியோகங்கள் 2027ல் தொடங்கி 2032க்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாகத் தயாரிக்கப்படும் 97 தேஜஸ் போர் விமானங்கள், நீண்ட காலமாகச் சேவை செய்த மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படவுள்ளது.
















