சாதி, மதத்தை வைத்து மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் உள்ள ரோத்தாஸ் நகரில் ராஜ்நாத் சிங், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பீகாரில் ஓட்டுக்கள் திருடப்படுவதாக ராகுல் காந்தி நினைத்தால், அவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டுமென தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது ராகுலுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், கட்சியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனது பதவியை அளித்திருப்பார் என கூறிய ராஜ்நாத் சிங், சாதி, மதத்தை வைத்து மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி மக்களிடம் பொய்களை சொல்லி வெற்றி பெற விரும்புவதாக விமர்சித்த அவர், தெலங்கானாவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி அவர்கள் அரசியல் வெற்றியை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
















