பாரத நாடு பெருமை அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம் என அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி நூற்றாண்டு நிறைவுபெற்றதையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 நாட்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிற அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ் என்பது மிக வித்தியாசமானது என தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது யாருக்கும் எதிராக தொடங்கப்பட்டது அல்ல என கூறிய அவர், சமூகத்தை ஒன்றிணைக்கவே இது தோற்றுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஒருவரின் ஒழுக்கம், நடவடிக்கைகளை மேம்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் என தெரிவித்தார். அதிகாரத்தை எதிர்பார்க்காமல் ஆர்எஸ்எஸ் சேவை ஆற்றி வருகிறது என்றும, ஆர்எஸ்எஸ் சீராக கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கம் என்றும் அவர் கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
















