தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருக்கிறார். என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பென்னாகரம் பகுதியில் சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி செல்லும் நிலை உள்ளதாக தெரிவித்தார். மாம்பழத்திற்கு ஆதார விலை கிடைக்காததால், விவசாயிகள் அதனை சாலை, ஆறுகனில் வீசுவதாகவும் கூறினார்.
அனைத்தது கிராமங்களிலும் கஞ்சா, மது போதை தலை விரித்தாடுவதாக குற்றம்சாட்டிய அவர், “திமுக ஆட்சி முடிவடைய 140 நாட்கள் உள்ளது என்றும், கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டதாகவும் கூறினார்.
















