பஞ்சாப் மாநிலம் மோகாவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப், சண்டிகர், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குப் பின் பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் காற்று மாசு ஏற்படுவதால் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. பயிர்க் கழிவுகளை எரிப்பதை தடுக்க அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப்பின் மோகாவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
















