அரசு துறைகளில் தற்காலிகமாகப் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகை போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில், புது திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்கும், குரூப் சி மற்றும் டி பிரிவு அரசு தேர்வுகளில், அவர்கள் தற்காலிமாக அரசு துறையில் பணி செய்த காலத்தின் அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், இது அவர்கள் நிரந்தர பணியைப் பெறுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது பலர் ஒப்பந்த மற்றும் பருவகால பணியிடங்களில் இருப்பதால், அவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















