ஹோண்டுராஸில் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சியோமாரா காஸ்ட்ரோ அதிபராக உள்ளார்.
அவரது அரசாங்கத்தின் நிர்வாகத்தில் ஊழல் பெருகிட்டதாகவும், நிதி நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி, மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் டெகுசிகல்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
















