புதுச்சேரியில் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ஒற்றுமை நடைபயணத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்களுடன் இணைந்து கைலாஷ்நாதன் 5 கிலோ மீட்டர் தூரம்வரை நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது தப்பாட்டாம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன.
















