கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வார விடுமுறையை ஒட்டித் திரளான சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.
முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம் காணவும், கடலில் புனித நீராடவும் கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏரளமானோர் வருகை தருவது வழக்கம்.
அந்தவகையில், வார விடுமுறையான இன்று திரண்ட சுற்றுலா பயணிகள், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயத்தைக் காண முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, கடலில் புனித நீராடி, பகவதி அம்மனை தரிசனம் செய்தும், படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
















