சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார விடுமுறையையொட்டி மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
இந்த வாரம் காசிமேடு துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப் படகுகளும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று திரும்பியதால் ஏராளமான மீன்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக மீன்களின் விலை குறைந்து, வஞ்சிரம் ஒரு கிலோ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், கொடுவா மற்றும் தேங்காய் பாறை 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
















